ADDED : மே 15, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம் :திருப்பூர் மாவட்டம், தாராபுரம், ஈரோடு பைபாஸ் சாலையில் உள்ள தனியார் கல்லுாரி வளாகத்தில், நேற்று வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா
ஆகியோர், தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். தாராபுரம் வட்டத்தில் உள்ள மொத்தம், 23 பள்ளிகளை சேர்ந்த, 260 வாகனங்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 204 வாகனங்கள் ஆய்வுக்கு வந்தன. இதில், 185 வாகனங்களின் தரம் உறுதி செய்யப்பட்டது. 19 வாகனங்களுக்கு தகுதியின்மை உறுதி செய்யப்பட்டது.தனியார் பள்ளி மாவட்ட கல்வி அலுவலர் தேவராஜன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சஜினி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.