ADDED : மே 27, 2025 01:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், பவானி மற்றும் அந்தியூர் வட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களின் வருடாந்திர ஆய்வு, அந்தியூர் அருகே தனியார் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. கோபி சப்-கலெக்டர் சிவானந்தம் முன்னிலையில் ஆய்வு நடந்தது.
இதில் பவானி, அந்தியூர் பகுதிகளில் உள்ள, 36 தனியார் பள்ளிகளின், 342 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.சிறிய குறைகள் உள்ள பத்துக்கும் மேற்பட்ட வேன், பஸ்களை சரி செய்து, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் சான்றிதழ் பெற அறிவுறுத்தப்பட்டது.

