ADDED : மே 20, 2026 05:48 AM
கோபி:கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உட்பட்ட, கோபி மற்றும் சத்தியமங்கலத்தில், தலா, 30 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளுக்கு சொந்தமாக வேன் மற்றும் பஸ்கள் என, 463 வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது.
இந்த வாகனங்களின் வருடாந்திர ஆய்வு, கோபி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மைதானத்துக்கு வரவழைக்கப்பட்டது.
கோபி வட்டார போக்குவரத்து அலுவலர் நடராஜன் தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் நித்யா, ரவிக்குமார் அடங்கிய குழுவினர் கூட்டாய்வு செய்தனர். கோபியில், 283 வாகனங்களில், 236 வாகனங்கள் தகுதியானதாகவும், சத்தியமங்கலத்தில், 180 வாகனங்களில், 127 வாகனங்கள் தகுதியானதாகவும் வகைப்படுத்தப்பட்டன. எஞ்சிய நுாறு வாகனங்களில், சிறு குறைபாடு இருந்தது. அதை நிவர்த்தி செய்து மீண்டும் ஆய்வுக்கு உட்படுத்த அறிவுறுத்தினர்.
கோபி தீயணைப்பு நிலையம் சார்பில், நிலைய அலுவலர் ரமேஷ் தலைமையில், தீ விபத்தை தடுக்கும் முறை, எளிதாக கையாளும் முறை குறித்து, பள்ளி டிரைவர்களுக்கு செயல் விளக்கம் அளித்தனர்.
