தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி

நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி

நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில் அறிவியல் கண்காட்சி


ADDED : பிப் 07, 2026 04:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2026 04:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் சார்பில், 15-வது அறிவியல் கண்காட்சி, மேட்டுக்கடை அருகேயுள்ள நந்தா என்ஜினீயரிங் கல்-லுாரியில் நடக்கிறது. நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்-முகன் கண்காட்சியை தொடங்கி வைத்தார். கொங்கு வேளாளர் பாலிடெக்னிக் முதல்வர் விஸ்வநாதன், அரசு பாலிடெக்னிக் கல்-லுாரி முதல்வர் சீனிவாசன் ஆகியோர், பாலிடெக்னிக் மாணவர் படைப்பாற்றல் அரங்கை திறந்து வைத்தனர்.

சென்னை பி.என்.ஒய்.மிலோன் டெக்னாலஜிஸ் நிறுவன இயக்-குனர் வித்யா துரை, நேஷனல் ஆக்ரோ பவுண்டேசன் நிறுவன முதன்மை கண்காணிப்பு அதிகாரி ராமசுப்பிர மணியன், சி.ஜி.பவுண்டேசன் நிறுவன பேராசிரியர் தருண்யா பேசினர். நந்தா என்ஜினீயரிங், சித்தா, இயற்கை மற்றும் மருத்துவம், யோகா, மருந்தியல், செவிலியர், இயன்முறை மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பள்ளி மாணவர்களும் தங்களது படைப்புகளை வைத்தனர்.

விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளை அங்கத்தினர் பானுமதி சண்முகன், செயலாளர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவ-னங்களின் செயலாளர் திருமூர்த்தி, நந்தா என்ஜினீயரிங் கல்லுாரி புதிய படைப்புகள் முன்னேற்ற மைய தலைவர் ஈஸ்வரமூர்த்தி, முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்த-கோபால், பாலிடெக்னிக் கல்லுாரி முதல்வர் மோகன்குமார் உள்-பட பலர் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us