பரவும் 'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சல்; மருத்துவர் எச்சரிக்கை
பரவும் 'ஸ்கிரப் டைபஸ்' காய்ச்சல்; மருத்துவர் எச்சரிக்கை
ADDED : டிச 14, 2025 05:39 AM
ஈரோடு,: ஈரோடு மாவட்டம் உட்பட பல இடங்களில், 'ஸ்கிரப் டைபஸ்' பாக்டீரியா காய்ச்சல் பரவுவதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்-கவும், உரிய நேரத்தில் சிகிச்சை பெறவும் அறிவு யோசனை தெரி-வித்துள்ளனர்.
இதுபற்றி ஈரோடு அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவர் சசி-ரேகா கூறியதாவது: 'ஸ்கிரப் டைபஸ்' என்ற வகை பாக்டீரியா காய்ச்சல் தற்போது ஏற்படுகிறது. மழைக்காலம், பருவமழை முன் காலத்தில் சிறிய கொசு போன்ற வண்டு (ஜிக்கர் வண்டு) பூச்-சியால் ஏற்படும். இப்பூச்சி காடு, அடர்ந்த செடிகள், புற்கள் உள்ள பகுதியில் இருக்கும். மலையேற்றம், புதர் போன்ற பகு-திகளில் நடமாடுதல், மலையேற்ற பயிற்சி செல்லுதல், விவசாய பணி செய்தல், விவசாய தொழிலாளர்கள், வீட்டில் சுற்றிலும் அதிகமாக, அடர்த்தியான செடிகள் உள்ள இடங்களில் இப்பூச்சி வளரும். பூச்சி கடித்ததும் தோலில் சிறிய கொப்பளம் ஏற்படும். கடித்த இடத்தில் கருப்பு தடம், தோல் உரிந்து குழி போல இருக்கும். பிறகு ரத்தத்துக்குள் பாக்டீரியா ஊடுருவி, காய்ச்சல், கடும் தலைவலி, குளிர், உடல் வலி, சோர்வு ஏற்படுத்தும். 6 முதல், 21 நாட்களுக்கு கூட காய்ச்சல் இருக்கும். அதற்குள் நமது நுரையீரல், இருதயம், மூளை, கல்லீரல், கிட்னி ஆகியவற்றை கடுமையாக பாதித்து, செயல் இழக்க செய்து இறப்பை ஏற்ப-டுத்தும்.நுரையீரலை பாதித்தால் மூச்சு திணறலும், இருதயத்தை பாதித்தால் இருதய தசை புண்பட்டு இருதய துடிப்பு அதிக-மாகும், மூளையில் வீக்கம் ஏற்படுத்தும், கல்லீரல், கிட்னியின் வேலை செய்யும் திறனை குறைத்து செயல் இழக்க செய்து, மர-ணத்தை ஏற்படுத்தும். இந்த அறிகுறியுடன் காய்ச்சல் இருந்தால், 'எலைசா ஐ.ஜிஎம்.,' என்ற ரத்த பரிசோதனையில் கண்டறி-யலாம். உடன் சிகிச்சை பெற்றால், உறுப்புகள் பாதிக்காமல் குண-மடையலாம். ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஜன., முதல் தற்-போது வரை, 105 பேர் இப்பூச்சி கடித்து காய்ச்சல் ஏற்பட்டு குண-மடைந்துள்ளனர். இறப்பு ஏதுமில்லை. திருச்சியை சேர்ந்த ஒன்-பது வயது சிறுவன் சஞ்சீவி, இருதயம், நுரையீரல் பாதிப்புடன் கண்டறியப்பட்டு, 10 நாள் சிகிச்சையில் முற்றிலும் குணமடைந்-துள்ளார். இதுபோன்ற அறிகுறியுடன், ஒரு வாரம் தொடர் காய்ச்சல் தென்-பட்டால், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமடை-யலாம். அதேசமயம் இந்த காய்ச்சல் மற்றவர்களு
