ADDED : மார் 24, 2026 06:04 AM
திருப்பூர்திருவாரூரை சேர்ந்தவர் கலைச்செல்வி, 44. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார். இரண்டு மகள் உள்ளனர். சமீபத்தில், மூத்த மகள் காதல் திருமணம் செய்தார். கலைச்செல்வி தன்னுடன் வேலை பார்த்து வந்த ராஜேஷ், 36 என்பவரை, ஒன்றரை மாதம் முன் இரண்டாவதாக திருமணம் செய்தார். திருப்பூர், ஆண்டிபாளையத்தில் தங்கி வேலை செய்து வந்தனர்.
கடந்த 21ம் தேதி இரவு வீட்டில் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டது. மறுநாள் கலைச்செல்வி இறந்ததாக வந்த தகவலின் பேரில், சடலத்தை கைப்பற்றி திருப்பூர் சென்ட்ரல் போலீசார் விசாரித்தனர். உடம்பில் காயங்கள் இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்தனர். ராஜேஷிடம் விசாரித்து வந்தனர்.
நேற்று பிரேத பரிசோதனை செய்த போது, கலைச்செல்வியை தாக்கியதால், கண் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது உறுதி செய்யப்பட்டது. தொடர் விசாரணையில், அன்றிரவு ஏற்பட்ட குடும்ப பிரச்னையில், மனைவியின் தலையை பிடித்து, தரையில் பலமாக மோதி விட்டு, துாங்கியது தெரிந்தது. முகத்தின் பக்கவாட்டில் ஏற்பட்ட காயத்தில் இறந்தது தெரிந்தது. இக்கொலை தொடர்பாக, ராஜேைஷ போலீசார் கைது செய்தனர்.
