தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி

ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி


ADDED : ஏப் 16, 2026 06:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 8 சட்டசபை தொகுதிகளில், 2,379 ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர்கள், ஓட்டுச்சாவடி அலுவலர்கள், 1, 2, 3 ஆகியோருக்கு, இரண்டாம் கட்ட பயிற்சி நேற்று நடந்தது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ரங்கம்பாளையம் ஆர்.ஏ.என்.எம்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, ஈரோடு மேற்குக்கு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம், மொடக்குறிச்சிக்கு அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி என, 8 தொகுதிக்கும், 8 இடங்களில் தேர்தல் பயிற்சி வழங்கப்பட்டது.

ஓட்டுப்பதிவு நாளில் ஓட்டுச்சாவடியில் மேற்கொள்ளும் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கான பணிகள், இயந்திரங்களின் பராமரிப்பு, வழிமுறைகள் குறித்து பயிற்சி வழங்கினர். ஈரோடு கலெக்டர் கந்தசாமி, அந்தியூர் மங்களம் மேல்நிலைப்பள்ளி, பவானி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் பங்கேற்று, விளக்கம் அளித்தார்.

ஆப் மூலமான செயல்பாடு, தேர்தல் பணிகளில் துல்லியமான தகவல் பரிமாற்றம், பதிவுகள் பராமரிப்பு போன்றவை குறித்து விளக்கினர். நேற்று பயிற்சியில் பங்கேற்ற வேறு தொகுதியை சேர்ந்தவர்கள் தபால் ஓட்டுப்பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us