ADDED : ஜன 10, 2026 08:21 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில், இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், ஐந்தாவது நாளாக காத்திருப்பு போராட்-டத்தை நேற்றும் தொடர்ந்தனர்.
மாவட்ட மகளிரணி செயலர் பங்கஜம் தலைமை வகித்தார். தரையில் அமர்ந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கோரிக்கை அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, கோஷம் எழுப்பி, கோரிக்கை குறித்து பேசி னர். இதே கோரிக்கையை வலியுறுத்தி, மாநில அளவில் போராட்டம் நடந்து வருகிறது.
