/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்
/
தொடர் போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்
ADDED : மார் 05, 2024 01:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் சார்பில், ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் கடந்த வாரம் முதல் தொடர் போராட்டம் நடக்கிறது.
கோரிக்கையை வலியுறுத்தி ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க மாவட்ட செயலாளர் கார்த்திக், துணை தலைவர் சேகர், மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், மாவட்ட துணை செயலாளர் கருப்பசாமி, அந்தியூர் வட்டார செயலாளர் ராஜதுரை, அம்மாபேட்டை ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம், மாவட்ட மகளிரணி செயலாளர் சோபியா உள்பட, 50 ஆசிரியைகள் உள்ளிட்ட, 70 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

