/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இடைநிலை ஆசிரியர்கள் 2ம் நாளாக ஆர்ப்பாட்டம்
/
இடைநிலை ஆசிரியர்கள் 2ம் நாளாக ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 28, 2024 02:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:தேர்தல்
வாக்குறுதிப்படி சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இரண்டாம் நாளாக நேற்றும், ஈரோடு
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்
இயக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.
திருப்பூர்
மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணியம் சிறப்பு அழைப்பாளராக
பங்கேற்றார். இதில், 80 ஆண்கள் உள்ளிட்ட, 250 பேர் பங்கேற்றனர். இன்று
சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

