தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/விதை பண்ணையில் ஆய்வு

விதை பண்ணையில் ஆய்வு

விதை பண்ணையில் ஆய்வு


ADDED : பிப் 28, 2026 09:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 28, 2026 09:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகம் மற்றும் வேளாண் ஆராய்ச்சி நிலையங்கள், ஒவ்வொரு ஆண்டும் உயர் விளைச்சல் விதை ரகங்களை கண்டறிந்து, வெளியிட்டு வருகின்றன.

இதற்காக விதை பண்ணை அமைத்து, வல்லுனர் விதை உற்பத்தி செய்து, மாநில அரசு விதை பண்ணைகள், விவசாயி களுக்கு வழங்கப்படுகிறது. இந்நிலையில் விதை பண்ணைகளை ஆய்வு செய்து தரத்தை துல்லிய-மாக கடைபிடித்து, தரமான விதைகளை உற்பத்தி செய்வதை உறுதி செய்ய வல்லுனர் விதை உற்-பத்தி கண்காணிப்பு குழு ஆய்வு செய்கிறது.

பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் நடப்பு பருவத்தில் நெற்பயிரில் புதிய மத்திய ரக-மான ஏ.டீ.டி.45 (3.5 ஏக்கர்), ஏ.டீ.டி (ஆர்) 59 (2.5 ஏக்கர்), மக்காசோளம் - வி.ஐ.எம்., 419, உளுந்து வி.பி.என்.9 (2.5 ஏக்கர்), வி.பி.என்.10 (3 ஏக்கர்), நிலக்கடலை வி.ஆர்.ஐ.10 (3.28 ஏக்கர்) என வல்-லுனர் நிலை விதை பண்ணை அமைத்து, பயிர் பூக்கும் பருவம், அறுவடை நிலையில் உள்ளன.

இந்த பண்ணைகளை பவானிசாகர் வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் சண்முகம், உதவி பேராசிரியர்கள் சசிகலா, உத்தராசு, ஈரோடு விதைச்சான்று மற்றும் உயிர்மச்சான்றளிப்பு உதவி இயக்குனர் சத்தியராஜ், விதை சான்றளிப்பு அலுவலர் ஜெய-குமார், மாரிமுத்து உள்ளிட்டோர் ஆய்வு செய்து, உரிய நடைமுறைகளை கடைபிடிக்க களப்பணியாளர்களை அறிவுறுத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us