ADDED : ஜூலை 05, 2025 01:55 AM
கோபி, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் திட்டத்தின் கீழ், பயிர் வகைகள் அடங்கிய விதை தொகுப்பு வழங்கும் விழா, கோபியில் நேற்று நடந்தது. சப்-கலெக்டர் சிவானந்தம், 75 பயனாளிகளுக்கு வழங்கினார்.
* மொடக்குறிச்சியில் பா.ஜ., - எம்.எல்.ஏ., சரஸ்வதி, பயனாளிகளுக்கு பயிறு வகை விதை, காய்கறி விதை மற்றும் செடி தொகுப்புகளை வழங்கினார்.
* அம்மாபேட்டையில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில், இணையதளத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு, காய்கறி விதை தொகுப்பு மற்றும் பயறுவகை விதை தொகுப்பு, வழங்கப்பட்டது.
* தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரத்தில், புதியதாக கட்டப்பட்ட வேளாண் விரிவாக்க மைய கட்டடத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சியில் நேற்று திறந்து வைத்தார். கோவிந்தாபுரத்தில் நடந்த நிகழ்வில், மனித வள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி குத்துவிளக்கேற்றினார். இதை தொடர்ந்து பயனாளிகளுக்கு, விதை தொகுப்பு வழங்கினார். வெங்காய சேமிப்பு கிடங்கு பணி ஆணை வழங்கினார்.