ADDED : ஜன 07, 2026 06:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு குமலன்குட்டையில் ஒரு தனியார் ஓட்டலில், நாம் தமிழர் கட்சி சார்பில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் நிர்வாகிக-ளுடன் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பல்-வேறு ஆலோசனை மேற்கொண்ட நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடும், ஒன்பது தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தார்.
இதன்படி மடத்துக்குளம் தொகுதிக்கு ராதாமணி, தாராபுரம் தொகுதிக்கு திவ்யா, திருப்பூர் வடக்கு தொகுதிக்கு அபிநயா, திருப்பூர் தெற்கு தொகுதிக்கு தினேஷ், சிங்காநல்லர் தொகுதிக்கு நேருஜி, காங்கேயம் தொகுதிக்கு கார்மேகன், பல்லடம் தொகு-திக்கு தமிழினியன், கோவை வடக்கு தொகுதிக்கு நர்மதா, அவி-னாசி தொகுதிக்கு மேனகா ஆகியோரை வேட்பாளராக அறி-வித்து, அவர்களை அறிமுகப்படுத்தினார்.

