/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோட்டில் 'சூரியன்' மறைந்தால் தமிழகத்துக்கு விடியல் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
/
ஈரோட்டில் 'சூரியன்' மறைந்தால் தமிழகத்துக்கு விடியல் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
ஈரோட்டில் 'சூரியன்' மறைந்தால் தமிழகத்துக்கு விடியல் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
ஈரோட்டில் 'சூரியன்' மறைந்தால் தமிழகத்துக்கு விடியல் இடைத்தேர்தல் பிரசாரத்தில் சீமான் ஆவேசம்
ADDED : ஜன 25, 2025 01:59 AM
ஈரோடு: ''ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான், தமிழகத்துக்கு விடியல் பிறக்கும்,'' என, நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாக பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும், நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து, ஆர்.கே.வி.சாலை, கருங்கல்பாளையத்தில், அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்றிரவு பேசியதாவது:எப்போதும் தனித்து நின்று, தோல்வியை மட்டுமே தொடர்ந்து பெற்றாலும் ஈரோடு கிழக்கில் வேட்பாளரை அறிவித்துள்ளோம். முதல் தேர்தலில், 4.5 லட்சம் ஓட்டு பெற்று, 1 சதவீதத்தை எட்டி, தற்போது, 36 லட்சம் ஓட்டுகள் பெற்று, 8 சதவீதத்தை எட்டி, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக உயர்ந்துள்ளோம். தி.மு.க., ஆட்சி அவலத்தால் இலவசமாக படிக்க முடியவில்லை. படித்தால் வேலை இல்லை. வேலைக்கு சம்பளமில்லை. ஆசி-ரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு வேலை தரவில்லை. மாணவர், ஆசிரியர், டிரைவர், டாக்டர்கள் என அத்தனை பேரும் போராடிக் கொண்டே இருக்கின்றனர்.
மகளிர், மாணவியர், மாணவர்களுக்கு மாதம், 1,000 ரூபாய் கொடுத்தால் வென்றுவிடலாம் என கனவு காண்கின்றனர். தமிழ-கத்துக்கு, 8.5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதில் ஒரு நல்ல திட்டத்தை செய்தோம் என சொல்ல சொல்-லுங்கள். படிப்பகம் திறப்பதற்கு பதில் குடிப்பகம் திறக்கின்றனர். தமிழகத்துக்கும், மக்களுக்கும் நல்ல திட்டங்களை கொண்டு வர சிந்திக்காமல், 2026 சட்டசபை தேர்தலில் மகளிருக்கு, 2,000 ரூபாய், 2,500 ரூபாய் தருவதாக அறிவிப்பார். அது ஒரு திட்-டமா? எப்போதும் கிழக்கில் இருந்துதான் விடியல் பிறக்கும். எங்-களுக்கு ஓட்டுப்போட்டு விடியலை ஏற்படுத்துங்கள். ஈரோடு கிழக்கில் சூரியன் மறைந்தால்தான், தமிழகத்துக்கு விடியல் பிறக்கும்.
இவ்வாறு சீமான் பேசினார்.

