ADDED : மார் 20, 2026 04:14 AM
பவானி சட்டசபை தொகுதி, அம்மாபேட்டை-அந்தியூர் சாலையில், தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோத-னையில், தர்மபுரியில் இருந்து சாம்ராஜ்நகர் சென்ற வேன் டிரைவர் மஞ்சுநாத்திடம், 3 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்-தனர்.
*
அந்தியூர் தொகுதிக்கு உட்பட்ட அடுத்த பர்கூர்மலை தாமரைக்-கரையில், பறக்கும் படை தேர்தல் அலுவலர்கள் வாகன சோதனை செய்தனர். அந்தியூர் சின்னத்தம்பிபாளையத்தை சேர்ந்த கலைவாணி, 38, காரில் வந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், 85 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்-தனர்.* கோபி தொகுதிக்கு உட்பட்ட கோபி அருகே கரட்டடிபா-ளையம் பகுதியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் நேற்று முன்தினம் நள்ளிரவு சோதனை செய்தனர். இதில் கர்நா-டகா மாநிலம் மைசூரு பகுதி மாட்டு வியாபாரி வாகனத்தில் வந்தார். உரிய ஆவணமின்றி அவர் வைத்திருந்த, 2.30 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* கோபி அருகே காசிபாளையத்தில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருணாதேவி தலைமையில், நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரில் வந்த சத்தியமங்கலத்தை சேர்ந்த டாக்டர் சரவணனிடம், 1.76 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* கோபி அருகே பாரியூர் சாலையில், தேர்தல் பறக்கும் படை அதிகாரி அருண் தலைமையில், நேற்று மதியம் வாகன சோதனை நடந்தது. திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த புகையிலை விற்பனை வியாபாரி அபாஷ், வேனில் வந்தார். உரிய ஆவண-மின்றி வைத்திருந்த, 94 ஆயிரத்து 200 ரூபாயை பறிமுதல் செய்-தனர்.
* அந்தியூர் அருகே அண்ணாமடுவு பகுதியில், பறக்கும் படை அலுவலர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையில் நேற்று மாலை வாகன சோதனை நடந்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், மஞ்சபாளையத்தை சேர்ந்த சிகரெட் வியாபாரி கோகுல்ராஜ், 29, காரில் வந்தார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால், 73 ஆயிரத்து, 500 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
