ADDED : அக் 03, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், காங்கேயத்தில் சுய சார்பு பாரத கருத்தரங்கம் நடந்தது. திருப்பூர் பா.ஜ., முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். சுயநிறைவு மற்றும் உள்ளூர் பொருளாதாரம் வலுப்பெறுவதின் அவசியம் குறித்து சுவாமி கீதாம்ருதானந்தா விவரித்தார்.
உள்ளூர் பொருட்களை பயன்படுத்த வேண்டும். மக்களின் தேவைகளை உள்ளூர் வியாபாரிகள் மற்றும் உற்பத்தியாளர்களிடமிருந்தே பூர்த்தி செய்திட வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானம் எடுக்கப்பட்டது. பா.ஜ., முன்னாள் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு பிரிவு நந்தகுமார், சங்கரகோபால், முருகானந்தம் உள்பட, 50க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.