ADDED : மார் 31, 2026 06:02 AM
அ நிறம் | அளவு
காங்கேயம், சட்டசபை தேர்தலில், 100 சதவீத ஓட்டளிப்பை வலியுறுத்தி, தேர்தல் கமிஷன் நடவடிக்கையாக, காங்கேயம் சட்டசபை தொகுதி தேர்தல் அலுவலகமான தாசில்தார் அலுவலகத்தில், வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, கையெழுத்து பிரதி மற்றும் செல்பி பாயிண்ட் தொடங்கப்பட்டது.
நிகழ்வுக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் தலைமை வகித்தார். தாசில்தார் தங்கவேல் முன்னிலை வகித்தார். தொகுதி தேர்தல் அறிவிப்பு படிவம்-1, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், அலுவலகத்தில் ஒட்டப்பட்டது.
