/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் கருத்தரங்கு
/
ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் கருத்தரங்கு
ADDED : செப் 28, 2025 02:25 AM
ஈரோடு:ஈரோடு நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில், கல்வி ஆதாரங்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது.
ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்தார். திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லுாரி நுாலகர் சுபா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். கல்லுாரி நுாலகத்துறை தலைவர் பிரகாஷ் வரவேற்றார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், முதல்வர் நந்தகோபால் வாழ்த்துரை வழங்கினர்.
இதை தொடர்ந்து இலவசமாக கிடைக்கும் கல்வி உள்ளடக்கங்கள், இந்திய அரசின் டிஜிட்டல் நுாலகங்கள் மற்றும் அதில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டால் கிடைக்கும் வாய்ப்பு மற்றும் பயன்களை காணொலி காட்சி மூலம் விளக்கம் தரப்பட்டது. அறிவியல் மற்றும் மனிதவளத்துறை தலைவர் விஜயகுமார் நன்றி கூறினார். இதில், 450-க்கும் மேற்பட்ட மாணவ-, மாணவியர், 30-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.