ADDED : மார் 31, 2026 06:02 AM
கோபி, ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதி த.வெ.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தேர்தல் நடத்தும் அலுவலர் சிவானந்தத்திடம் நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.
மனுவில் அவர் குறிப்பிட்டிருந்த சொத்து விபரம்: சென்னை இந்தியன் வங்கியில், 64 ஆயிரம் ரூபாய்; கோபி ஐ.ஓ.பி., வங்கியில், 41 ஆயிரம் உட்பட, நான்கு வங்கிகளில், 30.48 லட்சம் ரூபாய் இருப்பு. கோபி, சத்தி, கோவை உள்ளிட்ட ஊர்களில், 48.77 லட்சம் ரூபாய் இருப்பு; மனைவி ஈஸ்வரி பெயரில் கோபி மற்றும் சத்தியமங்கலத்தில் உள்ள மூன்று வங்கிகளில், 1.07 லட்சம் ரூபாய் இருப்பில் உள்ளது.
ஒரு அம்பாசிடர் கார், மூன்று டிராக்டர், இரு இனோவா கார் என, 67.95 லட்சம் ரூபாய் மதிப்பில் வாகனங்கள் உள்ளது.
மேலும், 6.58 கோடி ரூபாயில் அசையும் சொத்து; 4.90 கோடி ரூபாயில் அசையா சொத்தும் உள்ளதாக, வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
