ADDED : ஆக 21, 2024 02:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோட்டில் பிரசித்தி பெற்ற ஆருத்ர கபாலீஸ்வரர், கஸ்துாரி அரங்கநாதர் மற்றும் மகிமாலீஸ்வரர் கோவில்களின் தேர்களை நிறுத்த, போதிய இடம் ஒதுக்கி தருமாறு, ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், தனக்கு சொந்தமான இடத்தை, மாநகராட்சி நிர்வாகம் ஒதுக்கியது. இதை தொடர்ந்து மூன்று கோவில்களின் தேர்களை நிறுத்தும் வகையில், பக்தர்கள் சார்பில் செட் அமைக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. பணி ஓரிரு நாட்களில் நிறைவடையும் எனத் தெரிகிறது.

