/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிக் பாக்கெட் அடித்த ஏழு பேருக்கு சிறை
/
பிக் பாக்கெட் அடித்த ஏழு பேருக்கு சிறை
ADDED : ஆக 14, 2025 02:37 AM
அந்தியூர், அந்தியூர் புதுப்பாளையம், குருநாத சுவாமி கோவில் தேர்த்திருவிழா நேற்று துவங்கி 17ம் தேதி வரை நடக்கிறது. ஐந்து நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கூடுவர். கூட்டத்தில் நுழையும் திருடர்கள், பிக் பாக்கெட் அடிப்பது, செயின் திருடுவது போன்ற குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர் என்பதால், ஸ்பெஷல் டீம் போலீசார், மப்டியில் சுற்றி வருகின்றனர்.
அந்தியூர் ரெட்டிபாளையத்தை சேர்ந்த செல்லமுத்து, 30, என்பவர், நேற்று குருநாத சுவாமி கோவில் மாட்டுச்சந்தை பகுதியில் நண்பருடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இவரது சட்டை பாக்கெட்டில் இருந்த, 1,900 ரூபாயை மர்ம நபர் ஒருவர், பிக்பாக்கெட் அடித்து தப்பி செல்ல முயன்றார். செல்ல
முத்து சத்தமிட்டதால், அப்பகுதியில் இருந்த ஸ்பெஷல் டீம் போலீசார், மர்ம நபரை துரத்தியபோது, பிக்பாக்கெட் அடித்த பணம், அங்கிருந்த ஆறு நபர்களிடம் கை மாறியது. துரிதமாக செயல்பட்ட போலீசார், ஏழாவது நபரை பிடித்து, பணத்தை கைப்பற்றினர்.
அந்தியூர் போலீசில் ஒப்படைத்து விசாரித்தபோது, பவானியை சேர்ந்த குமார், 22; வேலு, 25; ரகுநாதன், 27; பாபு, 36; நல்லதம்பி, 25; சரவணன், 42; தளவாய்ப்பேட்டை விக்னேஷ், 30; என்பது தெரிந்தது.
இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பவானி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

