தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சுடுகாட்டில் கழிவுநீர்; சடலத்துடன் மறியல்

சுடுகாட்டில் கழிவுநீர்; சடலத்துடன் மறியல்

சுடுகாட்டில் கழிவுநீர்; சடலத்துடன் மறியல்


ADDED : மார் 16, 2024 01:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2024 01:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி:கோபி அருகே லக்கம்பட்டி டவுன் பஞ்., உட்பட்ட கரட்டடிபாளையத்தில், இஸ்லாமிய சமூக மக்களுக்கான சுடுகாடு உள்ளது. கோபி அருகே நல்லகவுண்டம்பாளையத்தை சேர்ந்த, 60 வயதான முஸ்லிம் முதியவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார். உடலை புதைக்க சுடுகாட்டுக்கு நேற்று மதியம் சென்றனர். ஆனால், இடுகாடு வளாகத்தில் சாக்கடை கழிவு நீர் தேங்கியிருந்தது.

இதனால் சாக்கடை வசதி கோரியும், தடுப்புச்சுவர் அமைக்க கோரியும், உடலுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். கோபி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அமைதி பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணலாம் என கூறவே, கலைந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us