/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சக்தி தேவி அறக்கட்டளை 24வது ஐம்பெரும் விழா
/
சக்தி தேவி அறக்கட்டளை 24வது ஐம்பெரும் விழா
ADDED : பிப் 05, 2024 11:15 AM
ஈரோடு: ஈரோடு சக்தி மசாலா நிறுவனங்களின் ஒரு அங்கமான சக்தி தேவி அறக்கட்டளையின், 24வது ஐம்பெரும் விழா ஈரோட்டில் நடந்தது. திருப்பூர் பாப்பீஸ் குழும செல்வீஸ்வரி சக்திவேல் குத்து விளக்கேற்றினார். சக்தி மசாலா நிறுவனங்களின் தலைவர் துரைசாமி வரவேற்றார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது, மரங்களின் காவலர் விருது மற்றும் பதக்கம், 2022--23ம் கல்வி ஆண்டில் முதல், இரண்டாம் பிடித்த மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி, திரைப்பட நடிகர் சிவக்குமார் பேசியதாவது: 2,500 ஆண்டுகளுக்கு முன் நக்கீரன் ஒரு பாடலில் சொல்லி உள்ளார். அளவு கடந்த சொத்து சேர்ந்து விட்டால், அது குடும்பத்துக்கு போக மீதி சமுதாயத்துக்கு பங்கு போட்டுக்கொள். இல்லையேல் அந்த சொத்தே உன்னை அழித்து விடும், இந்த பாட்டுக்கு உதாரணமாக சக்தி மசாலா சாந்தியும், துரைசாமியும் வாழ்ந்து வருகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற திருப்பூர் பாப்பீஸ் குழுமங்களின் தலைவர் பத்மஸ்ரீ ஆ.சக்திவேல், அரிமா கூட்டு மாவட்ட முன்னாள் தலைவர் முத்துசாமி, திண்டல் பாரதி வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன் பேசினர்.
விழாவில், 338 மாணவ, மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை, பொருளாதாரத்தில் பின்தங்கிய 748 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை, ஈரோடு ஆத்மா மின் மயான அறக்கட்டளைக்கு ஆம்புலன்ஸ் இமயம் காப்பகம், கொங்குநாடுஅறக்கட்டளை, ஈரோடு மிட்டவுன் சேரிடபுள் மற்றும் சர்வீஸ் டிரஸ்ட், சென்னை கொங்கு அறக்கட்டளை, ரோட்டரி திருப்பூர் பிரைம் டிரஸ்ட் என சமுதாய பணிகளுக்காக ரூ.1.3௮ கோடி ரூபாய் மதிப்பில் உதவி வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை சாந்தி துரைசாமி, செந்தில் குமார், தீபா செந்தில்குமார், இளங்கோ, வேணுகோபால் மற்றும் நிர்வாகத்தினர் செய்தனர்.

