ADDED : ஏப் 19, 2026 05:54 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் :: கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்தை நேற்று கூடியது. பஞ்சப்பட்டி, தோகைமலை, லாலாப்பேட்டை, வயலுார், அய்யர்மலை, சத்தியமங்களம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் வீடுகளில் வளர்க்கும் ஆடு, கோழிகள் கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
நேற்று காலை கூடிய வார சந்தையில், தேர்தல் காரணமாக குறைவான ஆடு, கோழிகள் மட்டுமே விற்பனைக்கு வந்தன. 7 கிலோ கொண்ட ஆடு, 7,200 ரூபாய், நாட்டுக்கோழிகள் கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடு, கோழிகளை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
