ADDED : பிப் 27, 2024 02:04 AM
ஈரோடு;ஈரோடு, மேட்டூர் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நேற்று மகா சிவராத்திரி சிவலிங்க கண்காட்சி விற்பனை துவங்கியது.பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் சரவணன் கூறியதாவது:மகா சிவராத்திரியை முன்னிட்டு துவங்கப்பட்ட கண்காட்சியில் பஞ்சலோகம், பித்தளை, கருப்பு உலோகம், பேப்பர் கூழ், மண், மார்பிள் பவுடர், மாவுக்கல், கருங்கல் போன்றவையால் ஆன சிவலிங்கம், நந்தி, சிவன், நடராஜர், பார்வதி, சிலைகள், ஸ்படிகம், மரகதம், சிவப்பு, பச்சை, நீலம், சூரிய காந்தம் கற்களால் ஆன சிவலிங்கம், நந்தி சிலைகள், ருத்ராட்ச லிங்கம், ஆத்ம லிங்கம், பாண லிங்கம், கருங்காலி லிங்கம், நந்தி, 1 முகம் முதல், 14 முகம் கொண்ட ருத்ராட்சம், கவுரி சங்கர் ருத்ராட்சம், ருத்ராட்ச பாய், ருத்ராட்ச பிரேஸ்லெட் போன்றவை விற்பனைக்கு உள்ளன.சிவராத்திரி பூஜை பொருட்களும் உள்ளன.
குறிப்பிட்ட பொருட்களுக்கு, 10 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.இவ்வாறு கூறினார்.
