ADDED : டிச 19, 2024 01:27 AM
அ நிறம் | அளவு
தாராபுரம், டிச. 19-
வாடகை மற்றும் சொந்த கட்டடங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள, 18 சதவீத ஜி.எஸ்.டி. வரி விதிப்பு மற்றும் சொத்து வரி, அபராத வரி, மின் கட்டண உயர்வு, குப்பை வரி ஆகியவற்றை கண்டித்து, திருப்பூர் மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர், நேற்று கடை அடைப்பு போராட்டம் அறிவித்திருந்தனர்.
இதையொட்டி, தாராபுரம் பஸ் ஸ்டாண்ட் பைபாஸ் சாலை, வசந்தா ரோடு, பெரிய கடை வீதி, சின்னக்கடை வீதி, உடுமலை ரோடு, என்.என்.பேட்டை வீதி உள்பட நகரின் அனைத்து பகுதிகளிலும், 95 சதவீத கடைகள் அடைக்கப்பட்டு இருந்தது. இதனால், வெளியூரில் இருந்து தாராபுரம் வந்த மக்கள், ஹோட்டல் ஏதும் இன்றி அவதிக்கு ஆளாகினர். இருப்பினும், பஸ் ஸ்டாண்டில் கடைகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் இயங்கியது.
