ADDED : ஆக 31, 2026 06:18 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
பி.எம்.எஸ். காம்ப்ளக்ஸ் டி.வி.எஸ். வீதியை சேர்ந்த சுப்பிரமணியன்
மகன் முத்து கிருஷ்ணன், 26; ஈரோடு கனி மார்க்கெட்டில் ரெடிமேட் கடை
வைத்துள்ளார்.
கடந்த, 28ம் தேதி மதியம் ஈரோடு அரசு மருத்துவமனையில்
சிகிச்சை பெற்று வரும் நண்பரை பார்க்க செல்வதாக கூறி சென்ற
முத்துகிருஷ்ணன் அதன் பின் வீடு திரும்பவில்லை. அவரது சகோதரர்
புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
