ADDED : ஜூலை 20, 2024 07:16 AM
டி.என்.பாளையம் : டி.என்.பாளையம் அருகே கொண்டையம்பாளையத்தில், தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில், உயர்மட்ட பாலம் கட்டு-மான பணி நடக்கிறது. ஷட்டர்களை பயன்படுத்தி கான்கிரீட் போட்டு பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆட்-டோவில் வந்து நான்கு பேர் ஷட்டர்களை திருடியுள்ளனர். அப்-பகுதி மக்கள் பார்த்து விட்டு தகவல் தரவே, ஷட்டர் திருடியவர்-களை நெடுஞ்சாலை துறையினர் பிடித்து, பங்களாபுதுார் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கொண்டையம்பாளையம் மனோகரன், 44, தியாகராஜன், 38; ஈரோடு, சலங்கபாளையம் ஸ்ரீனிவாசன், 53; நஞ்சை துறையம்பாளையம் உதயகுமார், 50, என்பது தெரிந்தது. அவர்கள் திருடிய, 11 ஷட்டர், திருட்டுக்கு பயன்படுத்திய ஆட்-டோவை பறிமுதல் செய்தனர். நான்கு பேரையும் கைது செய்து, கோபி மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.