sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 12, 2026 ,தை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சிலவரி செய்திகள்: ஈரோடு

/

சிலவரி செய்திகள்: ஈரோடு

சிலவரி செய்திகள்: ஈரோடு

சிலவரி செய்திகள்: ஈரோடு


ADDED : டிச 30, 2024 03:04 AM

Google News

ADDED : டிச 30, 2024 03:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆஞ்சநேயர் சிலை ஊர்வலம்

ஈரோடு: ஈரோடு வ.உ.சி., பூங்கா மகாவீர ஆஞ்சநேயர் கோவிலில், இன்று அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இதை-யொட்டி வார வழிபாட்டு குழு சார்பில் நேற்று மாலை, ஆஞ்ச-நேயர் சிலை ஊர்வலம் நடந்தது. முறையாக பூஜைகள் செய்யப்-பட்ட பின் உற்சவர் சிலையும் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்-டது. வ.உ.சி., பூங்கா பின்புற பகுதியில் துவங்கி பார்க் சாலையில் தொடங்கி காவிரி சாலை, பவானி சாலை வழியே கோவிலை மீண்டும் அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள், வார வழிபாட்டு குழுவினர், மக்கள் பங்கேற்றனர்.

பவானி ஆற்றில் குளித்த

டிரைவர் மாயமானார்

புன்செய் புளியம்பட்டி: கோவை, பேரூர் செட்டிளையத்தை சேர்ந்தவர் அபுதாகீர், 40; வாடகை வாகன ஓட்டுனர். திருமணமாகி மனைவி, மூன்று மகன், ஒரு மகள் உள்ளனர். நண்பர்களான முரளிதரன், முருகன், சிலம்பரசன் ஆகியோருடன் காரமடைக்கு நேற்று செல்வதாக நேற்று கூறிவிட்டு, பவானிசாகர் பூங்காவுக்கு வந்தார். மதியம் பூங்கா எதிரே தடை செய்யப்பட்ட பகுதியான பவானி ஆற்றில் அனைவரும் குளித்துள்ளனர். தற்போது பாசனத்துக்காக, பவானி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆற்றின் நடுவே ஆழ-மான பகுதிக்கு சென்ற அபுதாகீர், நீச்சல் தெரியாமல் மூழ்கினார். இதை பார்த்து அதிர்சியடைந்த சக நண்பர்கள் முயன்றும் காப்-பாற்ற முடியவில்லை. பவானிசாகர் போலீசாருக்கு தகவல் தெரி-வித்தனர். அங்கு சென்ற போலீசார், சத்தி தீயணைப்பு துறை வீரர்-களுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரவானதால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. இன்று தேடும் பணி தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us