/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி தொடக்கம்
/
மாவட்டத்தில் எஸ்.ஐ.ஆர்., பணி தொடக்கம்
ADDED : நவ 05, 2025 01:55 AM
கரூர் : வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முன்னிட்டு, அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட கரடிப்பட்டி, புகழூர் நகராட்சியில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கெடுப்பு படிவம் வீடு வீடாக வழங்கும் பணியை, கலெக்டர் தங்கவேல் பார்வையிட்டார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் டிச., 4 வரை நடக்கும். வீடு வீடாக கணக்கெடுப்பு செய்யப்படும் விபரம், பி.எல்.ஓ., செயலியில் தெரியும். அதன் விபரங்களை ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் தெரிவிப்பார். கணக்கெடுப்பு படிவத்தை பூர்த்தி செய்து டிச., 4 வரை வாக்காளர் வழங்கலாம்.
மாவட்டத்தில் உள்ள, 1,055 ஓட்டுச்சாவடிகளுக்கும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் பணியை மேற்பார்வை செய்ய ஒவ்வொரு மேற்பார்வையாளருக்கும், 10 ஓட்டுச்சாவடி
கள் வீதம் மொத்தம், 112 மேற்பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரால் இதுவரை நியமனம் செய்யப்பட்ட, 3,785 ஓட்டுச்சாவடி நிலை முகவர்களுக்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
ஆய்வின் போது, உதவி ஆணையர் (கலால்) முருகேசன், தாசில்தார்கள் பிரபாகரன் (அரவக்குறிச்சி), பிரபா (புகழூர்) உள்பட பலர் பங்கேற்றனர்.
குளித்தலையில் டி.ஆர்.ஓ., ஆய்வு
* குளித்தலை சட்டசபை தொகுதியிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த படிவத்தை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு, வீடாக சென்று கொடுத்து வந்தனர். இப்பணியை டி.ஆர்.ஓ., விமல்ராஜ் ஆய்வு செய்தார். அப்போது, 'ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் கொடுத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அவரிடம் கொடுக்க வேண்டும்' என தெரிவித்தார்.
தாசில்தார் இந்துமதி, தேர்தல் தனி தாசில்தார் ஜெயவேல்காந்தன், துணை தாசில்தார் நீதிராஜன், நகராட்சி கமிஷனர் நந்தகுமார் மற்றும் வருவாய்த்துறையினர் உடனிருந்தார். குளித்தலை சப் கலெக்டர் சுவாதிஸ்ரீ, நங்கவரம், மருதுார் டவுன் பஞ்., மற்றும் இனுங்கூர், பொய்யாமணி பஞ்., பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். டவுன் பஞ்., செயல் அலுவலர்கள் காந்தருபன், அண்ணாமலை மற்றும் ஆர்.ஐ.,க்கள் தமிழரசி, சுகப்ரியா, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் உடனிருந்தனர்.

