ADDED : நவ 23, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, சிவகிரி அம்மன் கோவிலை சேர்ந்தவர் முருகேசன், 54; தனியார் நிறுவன டிரைவர். மன விரக்தியில் சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் இருந்தார். சிவகிரி நெசவாளர் காலனியில் உள்ள வாடகை வீட்டில் குடியிருந்தார். கடந்த, 21ல் மின் விசிறியில் துாக்கிட்டு கொண்டார்.
சகோதரர் வெங்கடாசலம் பார்த்து அவரை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில் முருகேசன் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. புகாரின்படி சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

