/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
/
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
ADDED : மே 09, 2025 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்,
காங்கேயம் அருகே வீரணம்பாளையம், சூலக்கல்புதுாரை சேர்ந்த விவசாயி சிதம்பரம், 50; தோட்டத்தில் பட்டி அமைத்து, 40க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் பட்டிக்கு சென்றார்.
அப்போது ஆறு ஆடுகள் இறந்தும், இரு ஆடுகள் உயிருக்கு போராடியபடியும் கிடந்தன. நள்ளிரவில் புகுந்த தெருநாய்கள் ஆடுகளை கடித்து கொன்றது தெரிய வந்தது. இதுகுறித்து வருவாய் துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். காங்கேயம் கிராம பகுதிகளில், தெருநாய்களுக்கு ஆடுகள் பலியாவது தொடர்வதால், விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.