/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
/
வெறிநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலி
ADDED : டிச 11, 2025 06:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம், முத்துார் அமராவதிபாளையம், காரகாட்டு-தோட்டத்தை சேர்ந்த முத்தப்பன், 65, விவசாயி, இவர் தனது தோட்டத்தில், 11 செம்மறி ஆடுகளை வளர்த்து விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று முன்தினம் தோட்டத்தில் ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது, கம்பி வேலியில் புகுந்த வெறி நாய்கள் ஆடுகளை கடித்தன. இதில் ஆறு ஆடுகள் உயிரி-ழந்தன. மூன்று ஆடுகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. மேட்டுப்பா-ளையம் வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், கால்நடை மருத்துவர் பெருமாள் ஆகியோர் இறந்த ஆடுகளுக்கு பிரேத பரிசோதனை செய்து, காய-மடைந்த ஆடுகளுக்கு சிகிச்சை அளித்தனர்.

