ADDED : ஜூன் 28, 2026 02:11 AM
ஈரோடு; தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மூலம் தானியங்கள் திட்டத்தில், மக்கா-சோளம் பயிர் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு மானியங்கள் வழங்குகி-றது.
இதன்படி ஈரோடு மாவட்ட விவசாயிகள் மக்கா-சேளம் பயிரிட விரும்பினால், மக்காசோள தொகுப்பு செயல் விளக்க திடல் அமைக்க ெஹக்டேருக்கு, 11,500 ரூபாய், மக்காசோள பயிரில் ஊடுபயிராக பாசிப்பயறு சாகுபடி செயல் விளக்கத்திடல் அமைக்க ெஹக்டேருக்கு, 7,500 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. இத்துடன் சிறுதானியங்கள் திட்டத்தில் சிறுதா-னிய பயிர்களான ராகி, சோளம், கம்பு சாகுபடியை ஊக்குவிக்க, செயல் விளக்க திடல் அமைக்க ெஹக்டேருக்கு, 7,500 ரூபாய், 10 ஆண்டுகள் வரையிலான ரகங்களின் விதை விநியோக மானியமாக, 50 சதவீதம் என கிலோவுக்கு, 30 ரூபாயும், எட்டு ஆண்டுகள் வரையிலான ரக விதை உற்பத்தி மானியமாக கிலோவுக்கு, 30 ரூபாயும் வழங்கப்படும். இதன் மூலம், சிறுதா-னிய பரப்பு, உற்பத்தியை அதிகரித்து, விவசா-யிகள் கூடுதல் லாபம் பெறலாம் என்று, வேளாண் அதிகாரிகள்
தெரிவித்தனர்.
