ADDED : செப் 03, 2026 05:49 AM
சென்னிமலை:சென்னிமலை
யூனியன், வெள்ளோடு அடுத்த சென்னிபாளியை சேர்ந்த கூலி தொழிலாளி
தர்மராஜ், 48. இவர் கடந்த 25ம் தேதி, முகாசி அனுமன்பள்ளியை சேர்ந்த
துரைசாமி என்பவரது தோட்டத்தில், பயிருக்கு தண்ணீர் பாய்ச்சிக்
கொண்டிருந்தார்.
அப்போது, தென்னை மரத்தில் இருந்து, தர்மராஜ்
கழுத்தில் கட்டு விரியன் பாம்பு ஒன்று விழுந்தது. அதனை தட்டி விட அவர்
முயன்ற போது, தர்மராஜை பாம்பு தீண்டியது. அவரது அலறல் சத்தம் கேட்டு
வந்த சக தொழிலாளர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலமாக ஈரோடு அரசு
மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி
அளிக்கப்பட்டதையடுத்து, கருங்கல்பாளையத்திலுள்ள தனியார்
மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் நேற்று மீண்டும், ஈரோடு அரசு
மருத்துவமனைக்கு அவரை அழைத்து வரும் போது, உயிரிழந்தார். வெள்ளோடு
போலீசார் விசாரிக்கின்றனர்.
