தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் 2 இடங்களில் பிடிபட்ட சாரை பாம்புகள்

ஈரோட்டில் 2 இடங்களில் பிடிபட்ட சாரை பாம்புகள்

ஈரோட்டில் 2 இடங்களில் பிடிபட்ட சாரை பாம்புகள்


ADDED : மே 19, 2026 02:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 19, 2026 02:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு வெட்டுக்காட்டு வலசில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. குடியிருப்பு கழிவு நீர் குழாயில் சாரை பாம்பு இருப்பதாக கிடைத்த தகவலின்படி, ஈரோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு சென்றனர். பாம்பை வெளியே கொண்டு வரும் முயற்சியாக, குழாய்க்குள் அதிகளவில் தண்ணீரை ஊற்றியதால் வெளியே வரவே லாவகமாக பிடித்தனர்.

இதேபோல் ஈரோடு சூளையில் உள்ள ஜி.எஸ்.டி., அலுவலக பார்க்கிங் பகுதியில், பாம்பு நடமாட்டம் இருப்பதாக, 10:00 மணிக்கு தகவல் வரவே அங்கும் விரைந்தனர். ஒரு கல்லின் பின்னால் ஒளிந்திருந்த பாம்பை சில நிமிடங்களில் பிடித்தனர். இதுவும் சாரை பாம்பு என தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us