ADDED : பிப் 14, 2026 08:49 AM
அ நிறம் | அளவு
அந்தியூர்: அந்தியூர் வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டப்பணிகள் சார்பில், கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் தலைமை வகித்து, 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை வழங்கினார்.
நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் பாண்டியம்மாள், துணை தலைவர் பழனிச்சாமி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார அலுவலர் கிருஷ்ணவேணி மற்றும் வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
