ADDED : அக் 05, 2026 04:47 AM

ஈரோடு:ஈரோடு வேளாண் பொறியியல் துறை விடுத்துள்ள அறிக்கை:
விவசாயிகளின்
நீர்பாசனத்துக்கான மின்சார தேவையை உறுதி செய்வதற்கும்,
வேளாண்மையில் சூரிய ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கவும, சூரிய
சக்தியால் இயங்கும் பம்பு செட்கள் மானிய விலையில் வழங்கப்படுகிறது.
இதற்கு
50 சதவீத மானியம், 566 மீட்டர் நீளம் மற்றும் 2 ஹெக்டேர் பரப்பு வரை, ஆதி
திராவிடர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த சிறு, குறு
விவசாயிகளுக்கு கூடுதலாக, 20 சதவீதம் மானியம் வழங்கப்பட்டு
வருகிறது.
*
உழவர் மற்றும் உழவர் குழுக்களுக்கு பாலி கார்பனேட் தகடுகளை கொண்ட
சூரிய கூடார உலர்த்திகள் அமைக்கப்படும். சூரிய சக்தி மூலம்
சுகாதாரமான முறையில் வேளாண் விளை பொருட்களை உலர வைப்பதன் மூலம்
அறுவடைக்கு பின் சேமிப்பு காலத்தை நீட்டித்தல், சேதாரத்தை குறைத்தல்,
மதிப்பு கூட்டுதல் மூலம் உழவர்களுக்கு அதிக லாபம் கிடைக்க வழி வகை
செய்யப்படும்.
குறிப்பாக தேங்காய், மிளகாய், எள், நிலக்கடலை
போன்ற எண்ணெய் விதைகள், முருங்கை இலைகள், கறிவேப்பிலை, மூலிகை இலைகள்,
கிராம்பு,இஞ்சி போன்ற மசாலா பொருட்கள், மக்காச்சோளம், வாழைப்பழம்
போன்ற பழங்கள், பாகற்காய் போன்ற காய்கறிகள் உலர்த்திகளில்
சேமிக்கலாம். விபரங்களுக்கு 0424-2270067, 0424-2904843, 04285-229159
தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
