sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சில வரி செய்திகள்: ஈரோடு மாவட்டம்

/

சில வரி செய்திகள்: ஈரோடு மாவட்டம்

சில வரி செய்திகள்: ஈரோடு மாவட்டம்

சில வரி செய்திகள்: ஈரோடு மாவட்டம்


ADDED : மே 02, 2024 12:10 PM

Google News

ADDED : மே 02, 2024 12:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மலையாள பகவதி அம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அடுத்த, அம்மாபாளையம் மலையாள பகவதி அம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நடந்தது.

முன்னதாக தொப்பம்பாளையம், வெள்ளாளபாளையம், கோடேபாளையம், அம்மாபாளையம் ஆகிய நான்கு ஊர் பெரியவர்கள் முன்னிலையில் கடந்த ஏப்.,23ம் தேதி பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து மெரவணை ஊர்வலம், கங்கணம் கட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் குண்டத்திற்கு கரும்பு வெட்ட செல்லுதல் நிகழ்ச்சி நடந்தது.

நேற்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டு, குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாலை அணிந்து விரதமிருந்த, 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் குண்டம் இறங்கி தீ மிதித்து மலையாள பகவதி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாவிளக்கு பூஜை நடந்தது.

மதுபாட்டில் விற்பனை கோபியில் இருவர் கைது

கோபி: கோபி அருகே, பைக்கில் மதுபாட்டில்களை விற்பனைக்கு கொண்டு வந்த இருவரை, கடத்துார் போலீசார் கைது செய்தனர்.

கோபி அருகே இண்டியாம்பாளையம் பகுதியில், கடத்துார் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அவ்வழியே அப்பாச்சி பைக்கில் வந்த இருவரை, போலீசார் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். அப்போது சத்தியை சேர்ந்த அரவிந்த், 23, அருண்குமார், 21, ஆகியோர், 120 மதுபாட்டில்கள் விற்பனைக்காக கொண்டு வந்ததை, போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.

கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் பலி

ஈரோடு: கான்கிரீட் கலவை இயந்திரத்தில் சிக்கி பெண் இறந்தார். ஈரோடு, பெரியசேமூர் எஸ்.எஸ்.பி., நகர் பகுதியில் கடந்த, 3 வாரங்களுக்கு மேலாக கான்கிரீட் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நேற்றும் காலை முதல் பணி நடந்து வந்தது. இப்பணியில் பவானி அருகே பெரியபுலியூரை சேர்ந்த பிரபாகரன், 33, அவரது மனைவி சரஸ்வதி, 30, உட்பட, 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

கான்கிரீட் கலவை இயந்திரத்தில் கலவையை தயார் செய்தனர். இயந்திரத்தின் முன் ஜல்லி, மண் போன்றவற்றை கொட்டி அனுப்பும் பிளேட்டுடன் கூடிய இயந்திரத்தில், சரஸ்வதியின் புடவை சிக்கி உள்ளே இழுத்தது.

இயந்திரத்துக்குள் சிக்கிய சரஸ்வதியை காப்பாற்ற முயன்றும், அவரது கழுத்து பகுதியில் பலமாக பிளேட்டுகள் இறங்கியதால், சம்பவ இடத்தில் இறந்தார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டது. வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

இறந்த சரஸ்வதிக்கு பூதனியா, 7, என்ற மகளும், சபரிவாசன், 3, என்ற மகனும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us