தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு சில வரி செய்திகள்

ஈரோடு சில வரி செய்திகள்

ஈரோடு சில வரி செய்திகள்


ADDED : மார் 05, 2026 05:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 05:13 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஓங்காளியம்மன் கோவிலில்

குண்டம் இறங்கிய பக்தர்கள்

பவானி: பவானி அருகே காளிங்கராயன்

பாளையம், வாய்க்கால்பாளையத்தில் உள்ள ஓங்காளியம்மன் கோவிலில், மாசி மாத குண்டம் திருவிழா கடந்த, 17ல், பூச்சாட்டுதல் துவங்கியது. நேற்று காலை, ஆற்றில் இருந்து அம்மன் அழைத்தலும், பின்னர் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆண், பெண்கள் நீண்ட வரிசையில் வந்து நின்று குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து பொங்கல் வைத்தல், கும்பம் ஆற்றில் விடுதல், மஞ்சள் நீராட்டு விழா, நாளை சுவாமி மொரமனையுடன் பண்டிகை நிறைவடைகிறது.

'உங்க கனவ சொல்லுங்க'

ஆவணம் நாளை வெளியீடு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தின் கீழ் இலக்கு-2030 உத்திகள் மற்றும் செயல் திட்ட ஆவணம் வெளியீட்டு விழா நாளை (6ம் தேதி), ஈரோடு பரிமளம் மஹாலில் காலை, 10:00 முதல் மதியம், 12:30 மணி வரை நடக்க உள்ளது.

'இலக்கு 2030 உத்திகள் மற்றும் செயல் திட்டம்' என்ற ஆவணத்தை உருவாக்க கடந்த ஜன., 30 ல் இதே மஹாலில் ஆலோசனை கூட்டம் நட்நதது. அங்கு பல்வேறு துறையினர் தெரிவித்த கருத்துகள், பரிந்துரைப்படி ஆவணம் தயார் செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 5 ஆண்டு

களில் நடந்த சாதனைகள், திட்டங்கள் குறித்த ஆவணமும் வெளியிடப்படுகிறது என, கலெக்டர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

கஞ்சா வைத்திருந்த

வாலிபருக்கு குண்டாஸ்

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி வலசு அணைகட்டு ரோடு இந்திரா வீதியை சேர்ந்தவர் தேவராஜ் மகன் சரவணன், 27. தற்போது, சாஸ்திரி நகர் விஜயா தியேட்டர் அருகே ரீட்டா பள்ளி பின்புறம் வசிக்கிறார். 3.250 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சூரம்பட்டி போலீசார் அவரை கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர். அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஈரோடு எஸ்.பி., சுஜாதா பரிந்துரைத்தார். ஈரோடு கலெக்டர் கந்தசாமி பரிசீலனை செய்து, சரவணனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதன்படி சரவணனை கோவை மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

வாலிபரை தாக்கி வழிப்பறி மூன்று வாலிபருக்கு காப்புஈரோடு: ஈரோடு பச்சபாளி கண்ணுபையன் தோட்டம் அருகே, நஞ்சை ஊத்துக்குளி பழனிசாமி நகரை சேர்ந்த கோபிநாத், 27. அயர்னிங் மாஸ்டராக உள்ளார். இவருக்கு செயலி மூலம் மதுரை சொக்கலிங்க நகரை சேர்ந்த ஜெகன், 21, அறிமுகமானார். கடந்த 2ம் தேதி இரவு ஜெகன் அழைத்ததன் பேரில், கோபிநாத் தன் வீட்டின் அருகே ஆள் அரவமற்ற பகுதிக்கு சென்றார். அப்போது ஜெகனுடன் இருந்த மேலும் இருவர், கோபிநாத்தை கத்தியால் தாக்கி ஜிபேயில் ரூ.2,500 பெற்றனர்.

அவரிடம் இருந்த மொபைல் போனையும் பறித்து கொண்டு டூவீலரில் தப்பினர். காயமடைந்த கோபிநாத் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஈரோடு தாலுகா போலீசார் அங்கிருந்து, 'சிசிடிவி' பதிவுகளை பார்த்தபோது கிடைக்கவில்லை. ஜிபே மூலம் பணம் பெற்ற ஜெகனின் முகவரி, மொபைல் போனை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரித்தனர். அதில் தன்னுடன் திருமண விசேஷங்களுக்கு, சமையல் வேலை செய்து வரும் மதுரையை சேர்ந்த கவுதம், 20, கதிர்வேல், 20, ஆகிய மூவரும் சேர்ந்து கோபிநாத்தை தாக்கி பணம், மொபைல் போனை பறித்து சென்றதை போலீசில் ஜெகன் தெரிவித்தார். போலீசார் மூவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபைல்போன், சிறிய கத்தி, டூவீலரை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us