ADDED : ஜூலை 10, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே தந்தையை தாக்கிய மகனை, போலீசார் கைது செய்தனர்.
கோபி அருகே காசிபாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி, 77, விவசாயி; கடந்த, 6ம் தேதி காலை, 11:00 மணிக்கு இவரது தோட்டத்தின் உள்ள தென்னை மரத்தில் தேங்காய்களை பறிக்க கூலியாட்கள் வந்திருந்தனர். அப்போது அங்கு சென்ற ராமசாமி மகன் கணேசன், 38, யாரும் தேங்காய் பறிக்க கூடாது என கூறியதால், அனைவரும் சென்றனர்.
இதை தட்டிக்கேட்ட ராமசாமியை தகாத வார்த்தையால் பேசி, சொத்தை தனக்கு எழுதி வைக்காமல், போலீசில் புகார் கொடுக்கிறாயா எனக்கூறி, கையால் தாக்கி தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் காயமடைந்த ராமசாமி, கோபி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ராமசாமி கொடுத்த புகார்படி, மகன் கணேசனை கடத்துார் போலீசார் நேற்று கைது செய்தனர்.