தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மாவட்ட போலீசாருடன் எஸ்.பி., ஆலோசனை

மாவட்ட போலீசாருடன் எஸ்.பி., ஆலோசனை

மாவட்ட போலீசாருடன் எஸ்.பி., ஆலோசனை


ADDED : மே 08, 2026 03:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2026 03:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு எஸ்.பி., சுஜாதா, தேர்தல் நடத்தை விதிகளால், தேர்தல் ஆணையம் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டார். இதை தொடர்ந்து தீவிரவாத தடுப்பு பிரிவு எஸ்.பி., கிரண் ஸ்ருதி, கடந்த மார்ச், 17 ஈரோடு எஸ்.பி.,யாக பொறுப்பேற்றார். பொறுப்பேற்றது முதல் தேர்தல் குறித்த முன்னேற்பாடு பணி, பிற வழக்கமான பணிகளை கவனித்தார்.

தேர்தல் பணிகள் நிறைவடைந்த நிலையில், கிரண் ஸ்ருதி எஸ்.பி., அலுவலகத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரிவுகளின் போலீஸ் அதிகாரிகள், ஈரோடு, பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய, 5 சப் டிவிஷன் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் ஆகியோருடன் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

'தேர்தல் பணிகளை சிறப்பாக நிறைவு செய்துள்ளோம். மாவட்டத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும். சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும். சட்ட விரோத செயல்கள் நடக்காமல் தடுக்க வேண்டும்' என்றும் அவர் உத்தரவிட்டார்.கடந்த, ஜன., முதல் மற்றும் தேர்தல் அறிவிப்புக்கு பின் தொடரப்பட்ட வழக்குகளின் நிலை, பிற குறை, கோரிக்கைகளை எஸ்.பி., கேட்டறிந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us