/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனித்துவ அட்டை பெற சிறப்பு முகாம் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்க அழைப்பு

ADDED : அக் 31, 2025 02:06 AM
ஈரோடு,  ஈரோடு மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம், ஒவ்வொரு வாரமும் புதன் மற்றும் வெள்ளி கிழமைகளில் நடக்க உள்ளது.
இதன்படி, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனைத்து புதன் கிழமைகளிலும், மாதத்தின் முதல் மற்றும், 3 வது வெள்ளிக்கிழமைகளில் ஈரோடு அரசு மருத்துவமனையிலும், 2வது, 4வது வெள்ளி கிழமைகளில் கோபி அரசு மருத்துவமனையிலும் முகாம் நடக்க
உள்ளது.
இதில் பங்கேற்று மாற்றுத்திறனாளிகள், தங்கள் ஆதார்  அட்டை நகல், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைபேசி எண், 4 போட்டோ, ஏற்கனவே மருத்துவ சிகிச்சை பெற்றிருந்தால் அதற்கான ஆவணங்களுடன் பங்கேற்று பயன்
பெறலாம்.