தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்

நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்

நாளை கல்விக்கடன் சிறப்பு முகாம்


ADDED : பிப் 14, 2024 10:11 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 10:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோட்டில் நாளை கல்வி கடனுக்கான சிறப்பு முகாம் நடக்க உள்ளது.

ஈரோடு, திண்டல் வேளாளர் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் காலை, 9:00 மணி முதல், மாவட்ட நிர்வாகம் சார்பில் நடக்கவுள்ளது.

தேசிய மற்றும் தனியார் வங்கியாளர்கள், அரசு அதிகாரிகள், கல்லுாரி நிர்வாகிகள் விண்ணப்பங்களை பெறுகின்றனர். தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் வழங்க, மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடு செய்வர்.

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் பொறியியல், நர்சிங், பார்மஸி, கலை, அறிவியல், கல்வியியல் நிறுவனங்களில், இளங்கலை, முதுகலை படிப்போர் விண்ணப்பிக்கலாம்.

ஈரோடு மாவட்டத்தை சொந்த ஊராக கொண்டு வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் படிப்போரும் விண்ணப்பிக்கலாம். www.vidyalakshmi.co.in அல்லது www.jansamarth.in எனும் இணைய தளங்களில் விண்ணப்பத்தை,

பதிவேற்றம் செய்தும் முகாமில் சமர்ப்பிக்கலாம்.

முகாமுக்கு வரும் மாணவர்கள், உரிய ஆவணங்கள், விண்ணப்ப நகல், மாணவர் மற்றும் பெற்றோரின், 2 புகைப்படம், வங்கி சேமிப்பு கணக்கு புத்தக நகல், இருப்பிட சான்று நகல், வருமான சான்று நகல், ஜாதிச்சான்று, பான் கார்டு நகல், ஆதார் அட்டை நகல், கல்லுாரியில் இருந்து பெறப்பட்ட கல்விக்கட்டண விபரம், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்று, முதல் பட்டதாரி எனில் அதற்கான சான்றும் கொண்டு வர வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us