/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நலவாரிய உறுப்பினராக சிறப்பு முகாம் ஏற்பாடு
/
நலவாரிய உறுப்பினராக சிறப்பு முகாம் ஏற்பாடு
ADDED : டிச 10, 2024 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 10-
வெளி மாநில கட்டுமான தொழிலாளர்களை, கட்டுமான தொழிலாளர்கள் நலவாரியத்தில், www.tnuwwb.in என்ற இணைய தளம் மூலம் விண்ணப்பித்து உறுப்பினராக பதிவு செய்யலாம்.
இதற்காக, ஈரோடு, சென்னிமலை சாலையில் உள்ள தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி கிழமை காலை, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை முகாம் நடக்கிறது. உறுப்பினர் பதிவுக்கு கட்டணம் ஏதுமில்லை. கூடுதல் விபரத்துக்கு அலுவலகத்தை நேரில் அல்லது 0424 2275591, 2275592 என்ற எண்கள், lossserode@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

