/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தனிப்பிரிவு ஏட்டுகள் பணியிட மாற்றம்
/
தனிப்பிரிவு ஏட்டுகள் பணியிட மாற்றம்
ADDED : அக் 09, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் நீண்ட காலமாக தனிப்பிரிவில் பணியாற்றி வந்த மூவர், பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்ட தனிப்பிரிவு ஏட்டுகளாக, கோபி போலீஸ் ஸ்டேஷனில் தங்கராஜ், சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷனில் கந்தவேல், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனில் வேல்முருகன் பணியாற்றினர். நீண்ட காலமாக தனிப்பிரிவில் பணியாற்றி வருவதாக எழுந்த புகாரை தொடர்ந்து, மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு பதிலாக கோபி போலீஸ் ஸ்டேஷனுக்கு சேதுபதி, சிறுவலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு விஜயகுமார், கடத்துார் போலீஸ் ஸ்டேஷனுக்கு பாலசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை ஈரோடு எஸ்.பி., சுஜாதா வழங்கினார்.