ADDED : ஏப் 12, 2026 06:15 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, துணை ராணுவ படைப்பிரிவில் இருந்து, 12 கம்பெனி வீரர்களை அனுப்ப, தேர்தல் கமிஷனுக்கு ஈரோடு எஸ்.பி., கடிதம் அனுப்பியிருந்தார். இதில் ஒன்பது கம்பெனி வீரர்கள் அனுப்பி வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதன்படி மத்திய தொழிற்பாதுகாப்பு படையின் ஒரு கம்பெனி வீரர்கள், கோபியில் பாரியூரில் தங்கியுள்ளனர்.
கேரளாவில், 9ம் தேதி சட்டசபை தேர்தல் நடந்து முடிந்து விட்டது. இந்நிலையில் அம்மாநில சிறப்பு ஆயுதப்படையை சேர்ந்த, 86 பேர் நேற்று முன்தினம் இரவு பஸ்சில் வந்தனர். பெருந்துறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் ஓட்டுப்பதிவு நிறைவு பெறும்வரை, பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர் என போலீசார் தெரிவித்தனர்.
