ADDED : ஜூலை 24, 2026 06:01 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோட்டில் இருந்து இன்று மதியம், 2:35 மணிக்கு, ஒடிசா மாநிலம் சம்பல்பூர் வரை செல்லும் வாராந்திர சிறப்பு ரயில் புறப்படுகிறது.
சேலத்துக்கு,
3:40 மணி, ஜோலார்பேட்டைக்கு மாலை, 5:58க்கும் செல்கிறது.
சனிக்கிழமை நள்ளிரவு, 11:15 மணிக்கு சம்பல்பூரை சென்றடைகிறது.
காட்பாடி,
பெரம்பூர், கூடூர், நெல்லுார், ஓங்கோல், விஜயவாடா, ராஜமுந்திரி,
சாமல்கோட், கோட்டவலசு, பாப்பிலி, ராயகடா, பாலான்கீர் வழியாக
செல்கிறது. பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்க சிறப்பு ரயில்
இயக்கப்படுவதாக, தென்னக ரயில்வே சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.
