ADDED : செப் 18, 2026 06:49 AM
ஈரோடு:ஈரோடு
மாவட்டத்தில் டெங்கு, ஹெச்-1 என்-1 இன்புளுயன்சா காய்ச்சல் பரவி
வருகிறது. குறிப்பாக பெருந்துறை, கோபி தாலுகா பகுதிகளில், காலநிலை
மாற்றத்தால் வேகமாக பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் வருவதை
தவிர்க்க பல்வேறு முன் எச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இதுகுறித்து பள்ளி கல்வி துறையினர் கூறியதாவது:
பள்ளிகளில்
சுற்றுப்புற துாய்மை, வகுப்பறைக்கு வெளியே தண்ணீர் தேங்குதவை
தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் காய்ச்சல் பதிவேடு
பராமரிக்கவும் அறிவுரை தரப்பட்டுள்ளது. பள்ளிகளில் மாணவ,
மாணவிகளின் நிலை குறித்த அறிய ஏற்கனவே ஒரு குழு உள்ளது.
அக்குழுவினரும் பள்ளிகளுக்கு சென்று கண்காணித்து விசாரித்து
வருகின்றனர். காய்ச்சலால் பாதிக்கப்படும் மாணவ, மாணவிகள் உடனடியாக
சிகிச்சைக்கு உட்படுத்தப்படுவர். இவ்வாறு கூறினர்.
