/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட்டுக்கு தீ வைத்த இலங்கை தமிழர் கைது
/
மொபட்டுக்கு தீ வைத்த இலங்கை தமிழர் கைது
ADDED : பிப் 21, 2026 09:17 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலையை அடுத்த மேலப்பாளையம், பெருமாள் கோவில் வீதியில் வசிப்பவர் செந்தில், 53; நேற்று முன்தினம் இரவு டி.வி.எஸ்., மொபட்டை வீட்டு முன்புறம் நிறுத்தியிருந்தார்.
நேற்று அதிகாலை மொபட் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தார். ஆனாலும் முழுவதும் எரிந்து சேதமாகி விட்டது. சென்னிமலை போலீஸில் புகாரளித்தார். அவரது வீட்டெதிரே வசிக்கும் புதுக்கோட்டை, தோப்புக்கொல்லையில் உள்ள இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த இந்துக்குமார், 35, என்பவரை போலீசார் கைது செய்தனர்.
என்ன காரணத்திற்காக தீ வைத்தார் என்பது குறித்து போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர்.

